தெம்பனிஸ் வட்டாரத்தில் லாரி ஒன்று மரத்தில் மோதி நடைபாதை மீது ஏறியது.
இந்தச் சம்பவம் செவ்வாய்க்கிழமையன்று (ஜனவரி 14) வீடமைப்பு வளர்ச்சிக் கழகக் குடியிருப்புக் கட்டடத்தின் தரைத்தளத்தில் (புளோக் 854 தெம்பனிஸ் ஸ்ட்ரீட் 82) நிகழ்ந்தது.
சம்பவம் நிகழ்ந்த இடத்துக்கு மிக அருகில் பிசிஎஃப் ஸ்பார்க்கல்டாட்ஸ் பாலர் பள்ளி ஒன்று உள்ளது.
லாரியின் முன் கண்ணாடியும் முன் பகுதியும் சேதமடைந்தன.
பாலர் பள்ளி மாணவர்கள் யாரும் காயமடையவில்லை என்று சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
காலை 9.50 மணி அளவில் சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததாக அது கூறியது.

