காணாமல் போன சிங்கப்பூர் மலையேறிகள் மீட்பு

காணாமல் போன சிங்கப்பூர் மலையேறிகள் மீட்பு

1 mins read
679dd947-ec7a-474d-b1e3-273e400e9767
மீட்கப்பட்ட மூவருக்கும் 22 வயது என்றும் அவர்களுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். - படம்: சிலாங்கூர் தீயணைப்பு, மீட்புப் படை

கோலாலம்பூர்: மலேசியாவின் சிலாங்கூர் மாவட்டத்தில் உள்ள புக்கிட் ஏபெக் நீர்வீழ்ச்சி அருகே காணாமல் போன மூன்று சிங்கப்பூர் மலையேறிகளும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

அவர்கள் ஜூன் 30ஆம் தேதி இரவு 7.20 மணியளவில் காணாமல் போனதாக தங்களுக்குத் தகவல் வந்ததாக சிலாங்கூர் தீயணைப்பு, மீட்புப் பிரிவின் துணைத் தலைவர் அகமது முக்லிஸ் முக்தர் தெரிவித்தார்.

அதைத்தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு 5 பேர் கொண்ட மீட்பு குழுவை அனுப்பி வைத்ததாக அவர் குறிப்பிட்டார்.

இரவு 11.20 மணிவாக்கில் மீட்புக் குழுவினர், மூன்று சிங்கப்பூர் மலையேறிகளையும் பத்திரமாக மீட்டதாக திரு முக்தர் கூறினார்.

மீட்கப்பட்ட மூவருக்கும் 22 வயது என்றும் அவர்களுக்கு எந்தக் காயமும் ஏற்படவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். மூவரும் பின்னிரவு 1.02 மணிவாக்கில் மலையடிவாரத்திற்கு அழைத்துவரப்பட்டனர்.

குறிப்புச் சொற்கள்