இஆர்பி கட்டணங்கள் 7 இடங்களில் குறைப்பு

இஆர்பி கட்டணங்கள் 7 இடங்களில் குறைப்பு

1 mins read
59872a4d-a886-46de-9475-f23fdbb40253
இஆர்பி கட்டணங்கள் மே 27ஆம் தேதி முதல் ஜூன் 23ஆம் தேதி வரை குறைவாக இருக்கும். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

சிங்கப்பூரில் ஜூன் மாதம் பள்ளி விடுமுறை காலம் என்பதால் 7 இடங்களில் மின்னியல் சாலைக் கட்டணம் (இஆர்பி) குறைக்கப்படுகிறது.

இஆர்பி கட்டணங்கள் மே 27ஆம் தேதி முதல் ஜூன் 23ஆம் தேதி வரை குறைவாக இருக்கும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் திங்கட்கிழமை (மே 20) தெரிவித்தது.

ஜூரோங் டவுன் ஹாலுக்கு பின் நகரை நோக்கிச் செல்லும் ஆயர் ராஜா விரைவுச்சாலையில் உள்ள 3 நுழைவாயில்கள், தீவு விரைவுச்சாலையில் உள்ள 2 நுழைவாயில்கள் (ஆடம் ரோடு, மவுண்ட் பிளசண்ட்) உள்ளிட்ட 13 நுழைவாயில்களில் இஆர்பி கட்டணம் 1 வெள்ளி குறைக்கப்படும்.

எந்ததெந்த நுழைவாயில்களில் கட்டணம் குறைக்கப்படும் என்பதை நிலப் போக்குவரத்து ஆணையத்தின் இணையத்தளத்தில் தெளிவாக தெரிந்துகொள்ளலாம்.

விடுமுறை காலத்திற்கு பின் அதாவது ஜூன் 24ஆம் தேதி முதல் எப்போதும் போல் இஆர்பி கட்டணங்கள் வசூலிக்கப்படும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் குறிப்பிட்டது.

குறிப்புச் சொற்கள்