சாங்கி வட்டாரத்தில் உள்ள லோயாங் வேலி கொண்டோமினியம் S$880 மில்லியனுக்கு விற்கப்பட்டுள்ளது.
சிங்ஹாயி (SingHaiyi) குழுமம் தலைமையிலான கூட்டமைப்பு ஒன்று அதனை வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 17) வாங்கியது.
இது கடந்த ஆண்டு விற்கப்பட்ட தாம்சன் வியூ கொண்டோமினியத்தின் S$810 மில்லியனை மிஞ்சிவிட்டதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாள் அறிகிறது.
இந்த அளவுக்கு அதிகமான தொகைக்கு விற்கப்பட்டுள்ளதால் அந்த கொண்டோமினியத்தில் வீடுகளை வைத்திருக்கும் உரிமையாளர்கள் S$1.67 மில்லியனுக்கும் S$3.91 மில்லியனுக்கும் இடைப்பட்ட தொகையைப் பெறுவர் என சொத்துச் சந்தை முகவரான ஹட்டன்ஸ் தெரிவித்தது.
லோயாங் வேலி கொண்டோமினியத்தில் 362 வீடுகள் உள்ளன. மிகச் சிறிய ஈரறை வீடு 1,001 சதுர அடிகளும் பெரிய நாலறை வீடு 3,272 சதுர அடிகளும் பரப்பளவைக் கொண்டுள்ளன.
அந்த கொண்டோமினிய வீடுகளுக்குரிய S$880 மில்லியன் மதிப்பிலான ஏலக்குத்தகை பிப்ரவரி 10ஆம் தேதி போட்டியின்றி முடிவடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

