தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

எல்டிஏ: 473 பேர் வேகத்தைக் குறைக்கும் கருவி இல்லாமல் மிதிவண்டி ஓட்டினர்

2 mins read
8629873b-8c3c-4ced-8399-b12a71cd0c6d
பொதுமக்கள் பயன்படுத்தும் நடைபாதைகளிலும் சாலைகளிலும் வேகத்தைக் குறைக்கும் கருவி இல்லாமல் மிதிவண்டி ஓட்ட 2021ஆம் ஆண்டுச் செப்டம்பர் மாதம் தடைவிதிக்கப்பட்டது.  - கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பொதுமக்கள் பயன்படுத்தும் நடைபாதைகளிலும் சாலைகளிலும் வேகத்தைக் குறைக்கும் கருவி இல்லாமல் மிதிவண்டி ஓட்ட 2021ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தடைவிதிக்கப்பட்டது.

அந்த விதிமுறை நடைமுறைக்கு வந்ததிலிருந்து இதுவரை 473பேர் வேகத்தைக் குறைக்கும் கருவி இல்லாமல் மிதிவண்டி ஓட்டிப் பிடிபட்டனர் என நிலப் போக்குவரத்து ஆணையம் (எல்டிஏ) தெரிவித்தது.

2023ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் 102 பேரும், 2022ஆம் ஆண்டுச் செப்டம்பர் மாதத்திலிருந்து அந்த ஆண்டு இறுதிவரை 223 பேரும் பொதுமக்கள் பயன்படுத்தும் நடைபாதைகளில் வேகத்தைக் குறைக்கும் கருவி இல்லாமல் மிதிவண்டி ஓட்டியதாக நிலப் போக்குவரத்து ஆணையம் கண்டறிந்தது.

“எங்களின் அமலாக்க அதிகாரிகள் அத்தகைய மிதிவண்டியைக் கண்டால் அதைப் பறிமுதல் செய்வார்கள். மிதிவண்டியை மீட்டெடுக்க உரிமையாளர்கள் அபராதக் கட்டணத்திற்கு மேல் சிறிய தொகையைக் கூடுதல் கட்டணமாகச் செலுத்த வேண்டும்,” என நிலப் போக்குவரத்து ஆணையம் கூறியது.

இருப்பினும் அந்த கூடுதல் கட்டணம் எவ்வளவு என்பதை ஆணையம் குறிப்பிடவில்லை.

பொதுமக்கள் செல்லும் பாதைகளில் சைக்கிளை ஓட்டுவதற்குமுன் வேகத்தைக் குறைக்கும் கருவியை நிறுவுமாறு உரிமையாளர்களுக்கு நிலப்போக்குவரத்து ஆணையம் மீட்டெடுப்புச் செயல்பாட்டின்போது நினைவூட்டும் என நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்தது.

பொதுமக்கள் பயன்படுத்தும் நடைபாதைகளில் முதல்முறையாக இந்த விதிமுறையை மீறுபவர்களுக்கு $10,000 வரை அபராதம் அல்லது ஆறு மாதங்கள் வரை சிறைத் தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

சாலைகளில் முதல்முறையாக இந்த விதிமுறையை மீறுபவர்களுக்கு $1,000 வரை அபராதம் அல்லது மூன்று மாதங்கள் வரை சிறைத் தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

2020ஆம் ஆண்டு அடுக்குமாடி கார் நிறுத்தும் இடத்தில் மிதிவண்டியில் வேகத்தைக் குறைக்கும் கருவி இல்லாமல் மிதிவண்டியை ஓட்டிய 13 வயது சிறுமி கீழே விழுந்து மாண்டார். அதன் பின்னர் வேகத்தைக் குறைக்கும் கருவி தொடர்பாக கடுமையான விதிமுறைகள் அறிவிக்கப்பட்டன.

குறிப்புச் சொற்கள்