தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

டிசம்பர் 17 முதல் பேருந்துச் சேவை எண் 167 நேரம் மாற்றம்

1 mins read
9442d57c-833d-4f47-adf7-25014ee22251
பேருந்து எண் 167 சேவை நிறுத்த முடிவு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. - படம்: சாவ்பாவ்

செம்பவாங்கிலிருந்து அப்பர் தாம்சன், ஆர்ச்சர்ட் ரோடு வழியாக புக்கிட் மேராவுக்கு இயக்கப்படும் பேருந்துச் சேவை 167, வரும் டிசம்பர் 17ஆம் தேதி முதல் அரைமணி நேரத்திற்கு ஒருமுறை இயக்கப்படும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் (நவம்பர் 28) செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.

“தற்போதைக்கு 167 எண் கொண்ட பேருந்து சேவையைத் தக்கவைக்க முடிவு செய்துள்ளோம். புதிய பயண வழித்தடங்களை முயற்சி செய்யவும் அதற்கு ஏற்றவாறு தங்கள் பயண நேரத்தை மாற்றியமைக்கவும் பயணிகளுக்கு அதிக காலம் தேவைப்படும் என்பதால் முன்பு அறிவித்த சேவை நிறுத்த முடிவு மாற்றியமைக்கப்பட்டது,” என்று தனது ஃபேஸ்புக் பக்கம் வழியாக ஆணையம் தெரிவித்துள்ளது.

தாம்சன் - ஈஸ்ட் கோஸ்ட் ரயில்பாதையை ஒட்டிய வழித்தடத்தில் இயங்கும் பேருந்துச் சேவைகளில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களின் ஒரு பகுதியாக, டிசம்பர் 10ஆம் தேதி முதல் பேருந்துச் சேவை 167 நிறுத்தப்படும் என்று நவம்பர் 17ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.

அந்த அறிவிப்பு வெளியான இரண்டு வாரங்களுக்குள், அதில் ஆணையம் மாற்றம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்