திரு லூசியன் வோங்கைத் தலைமைச் சட்ட அதிகாரியாக மேலும் மூவாண்டுகளுக்கு அதிபர் தர்மன் சண்முகரத்னம் நியமித்திருக்கிறார்.
திரு லயனல் யீ துணைத் தலைமைச் சட்ட அதிகாரியாக அடுத்த மூவாண்டுக்குத் தொடர்வார்.
தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகம் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 10) வெளியிட்ட அறிக்கையில் இந்தத் தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
இருவரின் நியமனமும் அடுத்த ஆண்டு (2026) ஜனவரி 14 தொடங்கி, 2029 ஜனவரி 13 வரை தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளாது.
திரு வோங், திரு யீ இருவரும் தத்தம் பதவிகளில் முதன்முதலில் 2017ல் நியமிக்கப்பட்டனர்.
இருவரும் பின்னர் 2020இலும் 2023இலும் மூவாண்டுகளுக்கு மறுநியமனம் செய்யப்பட்டனர்.