டோட்டோவில் கிட்டத்தட்ட $13 மில்லியன் வென்ற அதிர்ஷ்டசாலி

டோட்டோவில் கிட்டத்தட்ட $13 மில்லியன் வென்ற அதிர்ஷ்டசாலி

1 mins read
50eecfdd-b21b-4a2d-9884-3711c4d5e6b3
திங்கட்கிழமை (மே 4) இரவு டோட்டோ அதிர்ஷ்டக் குலுக்கு நடைபெற்றது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

டோட்டோ அதிர்ஷ்டக் குலுக்கில் ஒரே ஒருவர் கிட்டத்தட்ட $13 மில்லியன் பரிசை வென்றிருக்கிறார்.

திங்கட்கிழமை (மே 4) இரவு நடத்தப்பட்ட அந்தக் குலுக்கில் 7, 18, 19, 30, 36, 48, உபரி எண் 11 - என்ற எண்களைக் கொண்ட சீட்டு $12,813,283 பரிசைத் தட்டிச் சென்றது.

குரூப்-1க்கான பரிசுத்தொகை அது.

அந்தச் சீட்டு ‘குவிக்பிக்’ சாதாரணப் பிரிவில் வாங்கப்பட்டது என சிங்கப்பூர் பூல்ஸ் இணையத்தளம் குறிப்பிட்டிருந்தது. குரூப் 2ல் 17 சீட்டுகளுக்குப் பரிசு கிடைத்தது. அந்தச் சீட்டு ஒவ்வொன்றுக்கும் $87,000க்கும் மேற்பட்ட பரிசுத்தொகை பகிர்ந்தளிக்கப்படும்.

ஏப்ரல் மாதக் குலுக்குகளில் யாரும் குரூப்-1 பரிசை வெல்லாததால் அந்தத் தொகை முதலில் $1.2 மில்லியனாகவும் பின்னர் $5.7 மில்லியனாகவும் அதிகரிக்கப்பட்டு, இறுதியில் $12.80 மில்லியன் என அறிவிக்கப்பட்டது.

குலுக்கில் வெளியான அனைத்து எண்களையும் கொண்ட சீட்டுக்கே குரூப்-1 பரிசு வழங்கப்படும். அந்தப் பரிசை தொடர்ச்சியாக நான்கு குலுக்குகளில் யாரும் வெல்லாவிட்டால் அதன் பின்னர் குரூப்-2 சீட்டுகளுக்கு அது பகிர்ந்து அளிக்கப்படும்.

இதற்கு முன்னர், ஜனவரி 29ஆம் தேதி நடைபெற்ற குலுக்கில், $13.5 மில்லியன் பரிசுத் தொகையை ஆறு பேர் பகிர்ந்துகொண்டனர்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்