தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஆசியர்களைப் பாதிக்கும் நுரையீரல் புற்றுநோய்: $25 மில்லியன் ஆய்வு நிதி

1 mins read
66c1840b-8470-47d5-83fb-9623bcb78188
தேசியப் புற்றுநோய் நிலையத்தைச் சேர்ந்த மருத்துவர்கள், ஆய்வாளர்கள் கொண்ட குழுவுக்கு $25 மில்லியன் மானியம் வழங்கப்பட்டுள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஆசிய நோயாளிகளிடத்தில் நுரையீரல் புற்றுநோயைக் கையாளும் முயற்சிக்குச் சிங்கப்பூர் ஆய்வாளர்களுக்கு $25 மில்லியன் மானியம் வழங்கப்பட்டுள்ளது.

ஆபத்தை முன்கூட்டியே சொல்வது முதல் தொடக்கத்திலேயே நுரையீரல் புற்றுநோயைக் கண்டறிதல், நோயாளிகளுக்குத் தனிப்பட்ட சிகிச்சை எனப் புற்றுநோயின் ஒவ்வொரு கட்டத்திற்கும் தீர்வுகாணும் ஆய்வுகளை மேற்கொள்ள அந்த மானியம் உதவும்.

அனைத்துலக அளவில் உயிர்க்கொல்லி நோயான நுரையீரல் புற்றுநோய்க்குச் சிங்கப்பூரில் ஒவ்வொருநாளும் மூவர் பலியாகின்றனர். அது ஆசிய நோயாளிகளிடம் ஏன் வித்தியாசமாகச் செயல்படுகிறது என்பது குறித்து ஆழமாகப் புரிந்துகொள்ள ஆய்வாளர்கள் முற்படுகின்றனர்.

மேற்கத்திய நாடுகளில் நுரையீரல் புற்றுநோய் பெரும்பாலும் புகைபிடித்தலோடு தொடர்புடையதாக உள்ளது. இருப்பினும், சிங்கப்பூர் நுரையீரல் புற்றுநோய் நோயாளிகளில் கிட்டத்தட்ட பாதிப் பேர் புகைபிடித்ததில்லை.

பலரிடையே ‘இஜிஎஃப்ஆர்’ என்று அறியப்படும் மரபணு மாற்றத்தால் ஒருவகை நுரையீரல் புற்றுநோய் ஏற்படுகிறது.

கடந்த இருபது ஆண்டுகளாக குறிவைக்கப்பட்ட சிகிச்சைகள் மூலம் உயிர் பிழைப்போர் விகிதம் அதிகரித்திருந்தாலும் பெரும்பாலான நோயாளிகளிடத்தில் மருந்தை எதிர்க்கும் ஆற்றல் 9லிருந்து 15 மாதங்களில் உருவாகிறது. அத்தகையோர் மீண்டும் நுரையீரல் புற்றுநோய்க்கு ஆளாகின்றனர். ஆரம்பகட்ட நோயாளிகள்கூட அறுவைச் சிகிச்சைக்குப் பின் மீண்டும் பாதிப்புக்குள்ளாகின்றனர்.

இவற்றையெல்லாம் ஆராய சுகாதார அமைச்சின் தேசிய மருத்துவ ஆய்வு மன்றம் $25 மில்லியன் மானியம் வழங்கியுள்ளது.

குறிப்புச் சொற்கள்