தி ஸ்கைவாட்டர்ஸ் கட்டடம் கட்டப்படுகிறது.
அந்த 63 மாடிக் கட்டடத்துக்கான கட்டுமானப் பணிகள் 2038ஆம் ஆண்டில் நிறைவடையும்.
அது சிங்கப்பூரில் ஆக உயரமான கட்டடமாகத் திகழும்.
தி ஸ்கைவாட்டர்ஸ் கட்டடம், 8 ஷென்டன் வேயில் அமைந்திருக்கும்.
சிங்கப்பூரின் ஆக உயரமான கட்டடத்தில் சொகுசு ஹோட்டல் அமான் அமையும்.
ஹோட்டல், சொகுசு குடியிருப்பு, உலகளாவிய தனியார் உறுப்பினர்களைக் கொண்ட மன்றம், அலுவலகங்கள், கடைகள், ஒவ்வொரு சில மாடிகளுக்குப் பிறகு மொட்டைமாடி தோட்டங்கள் போன்றவற்றை 305 மீட்டர் உயரமுள்ள புதிய கட்டடம் கொண்டிருக்கும்.
ஹோட்டல் அமானுக்கு தோக்கியோ, நியூயார்க், பேங்காக் ஆகிய நகரங்களில் ஏற்கெனவே கட்டடங்கள் உள்ளன.
சிங்கப்பூரை மையமாகக் கொண்ட பெரினியல் ஹோல்டிங்சின் தலைமையின்கீழ் செயல்படும் நிறுவனங்கள் தி ஸ்கைவாட்டர்ஸ் கட்டடத்தைக் கட்டுகின்றன.
தொடர்புடைய செய்திகள்
உலகிலேயே ஆக உயரமான கட்டடமான புர்ஜ் அல் கலிஃபாவை வடிவமைத்த ஸ்கிட்மோர், ஓவிங்ஸ் அண்ட் மெரில் கட்டடக்கலை நிறுவனம் ஆகியவை தி ஸ்கைவாட்டர்ஸ் கட்டடத்தையும் வடிவமைக்கின்றன.