ஐந்து மாதக் குழந்தையைத் துன்புறுத்திய குற்றத்தைப் பணிப்பெண் ஒப்புக்கொண்டார்

ஐந்து மாதக் குழந்தையைத் துன்புறுத்திய குற்றத்தைப் பணிப்பெண் ஒப்புக்கொண்டார்

கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

18 Nov 2026 - 6:17 pm

1 mins read

ஐந்து மாத ஆண் குழந்தையைக் கடித்து, கடுமையாக உலுக்கி, கழுத்தை நெரித்து, அடித்து பலமுறை கொடுமைப்படுத்திய குற்றத்தை 24 வயது மியன்மார் இல்லப் பணிப்பெண் புதன்கிழமை (நவம்பர் 18) ஒப்புக்கொண்டார்.

ஏப்ரல் 2 முதல் 19 வரை, பெரும்பாலும் நள்ளிரவுக்குப் பிறகு குறைந்தது 11 முறை அக்குழந்தையை அவர் துன்புறுத்தினார்.

குழந்தையைக் கடுமையாக உலுக்கியது, வாயில் வலுக்கட்டாயமாகச் சூப்பியைத் திணித்தது, கன்னத்தில் அறைந்தது, தலையில் கொட்டியது, கை, இடுப்புப் பகுதிகளில் கடித்தது ஆகியவை அறையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கருவியில் பதிவாகின.

ஏப்ரல் 19ஆம் தேதி குழந்தையின் தாயார் கண்காணிப்புக் கருவிப் பதிவுகளைப் பார்த்தபோது பணிப்பெண் கொடுமைப்படுத்தியது வெளிச்சத்திற்கு வந்தது. காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தையின் அடையாளத்தைக் காக்க, குழந்தையின் பெயரை வெளியிட நீதிமன்றம் தடைசெய்தது.

பணிப்பெண்ணுக்கு ஜனவரி 12ஆம் தேதி தண்டனை விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குழந்தையைத் துன்புறுத்தும் குற்றத்திற்கு எட்டு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது $8,000 வரை அபராதம், அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

குறிப்புச் சொற்கள்
கொடுமைதுன்புறுத்தல்பணிப்பெண்