பணிப்பெண்கள் சிலர் புண்படுத்தும் சொற்களைப் பரிமாறிக்கொண்டு, அது வாக்குவாதமாக மாறிப் பின்னர் கைகலப்பான சம்பவம் செப்டம்பர் 29ஆம் தேதி சமர்செட் எம்ஆர்டி நிலையத்திற்கு அருகே நடந்துள்ளது.
அன்றைய தினம் மாலை நான்கு மணியளவில் இரண்டு பணிப்பெண் கும்பல்களுக்கு இடையே சண்டை மூண்டதாக வழிப்போக்கர் ஒருவர் ஷின் மின் டெய்லி நியூஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
உரையாடலின்போது ‘அழகற்ற’, ‘பருமன்’ போன்ற சொற்கள் காரணமாக அந்தப் பெண்கள் ஆத்திரம் அடைந்ததாகக் கூறப்படுகிறது.
அதில் தொடங்கிய சூடான வாக்குவாதம் பின்னர் கைகலப்பாக மாறியது.
“அவர்கள் சண்டை போட்டுக்கொள்வதைப் பார்த்தேன். இரண்டு சாராரும் விட்டுக்கொடுப்பதாக இல்லை,” என்றார் அந்த வழிப்போக்கர்.
அவர்கள் அனைவரும் கிள்ளினி ரோட்டில் உள்ள ஆர்ச்சர்ட் அக்கம்பக்க காவல் நிலையத்தை அடையும்வரை சண்டை தொடர்ந்ததாகவும் கூறப்படுகிறது.
அதையடுத்து, மூன்று பணிப்பெண்கள் இரண்டு மருத்துவ வண்டிகளில் கொண்டு செல்லப்பட்டனர்.
மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட மூன்று பெண்களும் 38 வயதுக்கும் 46 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என்று காவல்துறையினர் உறுதிசெய்தனர்.
தொடர்புடைய செய்திகள்
மேலும் மூன்று பெண்கள் காவல்துறை விசாரணையில் உதவி வருகின்றனர்.


