இவ்வாண்டு வட்ட ரயில் பாதையின் ஆறாம் கட்டம், தாம்சன் - ஈஸ்ட் கோஸ்ட் ரயில் பாதையின் ஐந்தாவது கட்டம், டௌன்டவுன் ரயில் பாதையின் மூன்றாம் கட்ட நீட்டிப்பு ஆகியவை திறக்கப்படும் என்று தற்காலிகப் போக்குவரத்து அமைச்சர் ஜெஃப்ரி சியாவ் அறிவித்துள்ளார்.
குறுக்குத் தீவு ரயில் பாதையின் மூன்றாம் கட்டப் பணிகள் அடுத்த ஆண்டு தொடங்கப்படும்.
இது ஜூரோங் லேக் வட்டாரத்திலிருந்து ரயில் பாதையை மேற்கு நோக்கி நீட்டிக்கும் என்று புதன்கிழமை (மார்ச் 4) நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற போக்குவரத்து அமைச்சுக்கான நிதி ஒதுக்கீட்டு விவாதத்தில் பேசிய திரு ஜெஃப்ரி தெரிவித்தார்.
செங்காங் வெஸ்ட், சிராங்கூன் நார்த் பகுதிகளுக்குச் சேவை வழங்கும் ஒரு பசுமை ரயில் பாதை குறித்தும் பரிசீலிக்கப்படும்.
மேலும், ஜூரோங் வட்டார ரயில் பாதையின் வெஸ்ட் கோஸ்ட் நீட்டிப்புக்கான பொறியியல் ஆய்வுகளும் இவ்வாண்டுப் பிற்பகுதியில் தொடங்கவுள்ளன.

