தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வரிசையில் வராமல் ஏமாற்றிய மலேசிய கார் ஓட்டுநருக்கு அனுமதி மறுப்பு

1 mins read
e041c030-21c9-426b-8ee0-e04304ecce78
படம்: SG ROAD VIGILANTE -

சென்ற சனிக்கிழமை மலேசியாவில் பதிவுசெய்யப்பட்ட வாகனத்தை ஓட்டி வந்த ஆடவர் ஒருவர் வரிசையில் காத்திருக்காமல் லாரி, பேருந்துகளுக்கான தடத்தைப் பயன்படுத்தியதைத் தொடர்ந்து சிங்கப்பூருக்குள் நுழைய அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

அச்சம்பவம் தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் பரவிவருகிறது.

உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடி வழியாக சிங்கப்பூரிலிருந்து மலேசியா செல்லும் இரண்டு தடங்களிலும் வாகன நெரிசலைக் காட்டும் அக்காணொளியில் அந்த காருக்குப் பின்னால் பேருந்து ஒன்று செல்வதும் தெரிகிறது.

துணைக்காவல் படை அதிகாரிகள் இருவர் காரை நிறுத்துவதும் அவர்களில் ஒருவர் சற்றே நகர்ந்தபோது அந்த கார் விரைந்து சென்றதையும் காணொளி காட்டுகிறது.

துணைக்காவல் படை அதிகாரி காரை திருப்பி மீண்டும் சிங்கப்பூருக்குள் நுழையச் சொன்னதை மீறி அதன் ஓட்டுநர் அபாயகரமாக அதை ஓட்டிச் சென்றதாக குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணையம் தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்