தேசிய தினக் கொண்டாட்டங்களில் கலந்துகொள்ளும் மலேசியத் துணைப் பிரதமர்

1 mins read
db94c075-6b75-4a44-a216-58f88ea9733d
மலேசியத் துணைப் பிரதமர் டாக்டர் அகம்மது ஸாஹித் ஹமிடியை (இடது) வரவேற்கிறார் சிங்கப்பூர் துணைப் பிரதமர் கான் கின் யோங். - படம்: தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சு

சிங்கப்பூரின் 60ஆம் ஆண்டு தேசிய தினக் கொண்டாட்டங்களில் கலந்துகொள்வதற்காக சிங்கப்பூர் வந்திருக்கும் மலேசியத் துணைப் பிரதமரும் கிராமப்புற, வட்டார மேம்பாட்டு அமைச்சருமான டாக்டர் அகம்மது ஸாஹித் ஹமிடியை சனிக்கிழமை (ஆகஸ்ட் 9) வரவேற்றார் சிங்கப்பூர் துணைப் பிரதமர் கான் கின் யோங்.

சிங்கப்பூரும் மலேசியாவும் அணுக்கமான, நீண்டகால உறவைக் கொண்டுள்ளன. அது வலுவான பொருளியல் பங்காளித்துவம் மற்றும் மக்களுக்கு இடையேயான உறவுகளின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது.

ஜோகூர்-சிங்கப்பூர் சிறப்பு பொருளியல் மண்டலம் உட்பட, இரு நாடுகளுக்கும் இடையேயான தற்போதைய முயற்சிகள் மற்றும் பங்காளித்துவ முயற்சிகள் டாக்டர் ஸாஹித்தும் திரு கானும் விவாதித்தார்கள்.

சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையே நெருக்கமான இருதரப்பு உறவுகளை வளர்ப்பதற்கான வழிகள் குறித்தும், நமது வட்டாரம், வர்த்தகங்கள், மக்களின் நலனுக்காக ஆசியானுக்குள் ஒருங்கிணைப்பை எவ்வாறு வலுப்படுத்துவது என்பது குறித்தும் தாங்கள் இருவரும் பேசியதாக திரு கான் தமது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டிருக்கிறார்.

குறிப்புச் சொற்கள்