மலேசிய விமான, பேருந்து பயணச்சீட்டு விலை ஏறுமுகம்

2 mins read
b5f30fc8-a51d-4d2d-be16-7f4d701f8e3c
பலர் சொந்த நாடு திரும்புவதால் விலையேற்றம் பல மடங்காக உள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சீனப் புத்தாண்டு வரும் பிப்ரவரி 17, 18 ஆம் தேதிகளில் கொண்டாடப்பட உள்ளது.. இந்நிலையில், சிங்கப்பூரில் பணியாற்றும் வெளிநாட்டுச் சீனர்கள் பலர், சொந்த நாடுகளுக்குத் திரும்பும் காலகட்டமாக இது உள்ளது.

சிங்கப்பூரிலிருந்து மலேசியாவுக்குத் திரும்பும் சீனர்களுக்கு ஒவ்வோர் ஆண்டும் கட்டுப்படியான விமானப் பயணச் சீட்டுகளைப் பெறுவது இந்தக் காலகட்டத்தில் கடினமாக உள்ளது.

சிங்கப்பூரில் தளவாடத் துறையில் பணியாற்றும் 26 வயது மலேசியச் சீன இளையரான சீனர் திரு டான், இவ்வாண்டு சீனப் புத்தாண்டுக்கு நான்கு மாதங்கள் முன்பாக அக்டோபர் 2025ல் பயணச்சீட்டுகளை வாங்கியுள்ளார். அவர் வாங்கிய இருவழிப் பயணச்சீட்டின் விலை 630 வெள்ளி.

பயணச்சீட்டுகள் கிடைக்காமல் போய்விடக்கூடும் என்ற அச்சத்தால் அவற்றை முன்கூட்டியே வாங்கிவிட்டதாகத் திரு டான் குறிப்பிட்டார்.

சாதாரண காலகட்டங்களில் இத்தகைய நுழைவுச்சீட்டுகளின் விலை 320 வெள்ளிக்கும் குறைவு. 

பேருந்து எடுத்தால் நீண்ட நேரம் எடுக்கும் என்பதாலும் போக்குவரத்து நெரிசல்களை எதிர்கொள்ள வேண்டிய சூழல் ஏற்படும் என்பதாலும் ஈப்போவுக்கு விமானம் வழியாகச் செல்வதாகத் திரு டான் கூறினார். 

பிப்ரவரி 14க்கும் 19க்கும் இடைப்பட்ட காலகட்டத்தில், ஈப்போவுக்கான இருவழி இக்கானமி வகுப்புப் பயணச் சீட்டின் விலை 822 வெள்ளிக்கும் 1,222 வெள்ளிக்கும் இடையே இருக்கும் என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கண்டறிந்தது.

வழக்கமாக இந்தச் சீட்டின் விலை 124 வெள்ளிக்கும் 191 வெள்ளிக்கும் இடையே இருக்கும். இந்த விழாக் காலகட்டத்தில் மலேசியாவுக்குப் பயணம் செய்பவர்கள் கூடுதலாகக் கட்டணம் செலுத்தவேண்டி வரும்.

சீனப் புத்தாண்டுக்குச் சில நாள்கள் முந்தைய காலகட்டத்தில் சிங்கப்பூருக்கும் கோலாலம்பூருக்கும் இடையிலான இருவழிப் பயணச் சீட்டின் விலை 420 வெள்ளிக்கும் 1,245 வெள்ளிக்கும் இடைப்பட்டிருக்கும். 

வழக்கமாக அத்தகைய பயணச்சீட்டுகளின் விலை 99 வெள்ளிக்கும் 345 வெள்ளிக்கும் இடைப்பட்டதாக இருக்கும்.

அத்துடன், சிங்கப்பூருக்கும் பினாங்கிற்கும் இடைப்பட்ட இருவழிப் பயணச்சீட்டுகளின் விலை, சீனப் புத்தாண்டுக் காலகட்டத்தில் 628 வெள்ளிக்கும் 1,049 வெள்ளிக்கும் இடைப்பட்டிருக்கும். வழக்கமான விலை 107 வெள்ளி முதல் 469 வெள்ளி வரை இருக்கும்.

குறிப்புச் சொற்கள்