சிங்கப்பூருக்குள் மின்சிகரெட் விநியோகித்த மலேசிய ஆடவருக்குச் சிறை

2 mins read
5cae559d-0bd7-402f-b7f4-5e59148bb5ec
சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட ஆங் பூன் ஹாங். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 2

சிங்கப்பூருக்குள் மின்சிகரெட்டுகளை விநியோகம் செய்த குற்றத்துக்காக மலேசியாவைச் சேர்ந்த சொத்துச் சந்தை முகவர் ஒருவருக்கு இரண்டு மாதத்திற்கும் மேல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.

ஆங் பூன் ஹாங், 43, எனப்படும் அவர், கூடுதல் வருமானத்திற்காக அந்த சட்டவிரோதச் செயலில் ஈடுபட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், கடந்த ஆகஸ்ட் மாதம் செம்பவாங் பகுதியில் உள்ள வெலிங்டன் சர்க்கிள் பகுதியில் அவர் மீது சந்தேகப்பட்ட சுங்கத் துறை அதிகாரிகள், விசாரணை நடத்தியபோது மின்சிகரெட் கடத்தல் குற்றம் வெளிச்சத்துக்கு வந்தது.

விற்பனைக்காக மின்சிகரெட்டுகளை வைத்திருந்த குற்றத்தை திங்கட்கிழமை (டிசம்பர் 15) ஆங் ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, 10 வாச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

அதேபோன்ற மற்றொரு குற்றச்சாட்டும் தண்டனை விதிப்பின்போது கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

ஆங் பணத்திற்குச் சிரமப்பட்டபோது ‘கென்னி’ என்று அழைக்கப்படும் அவரது நண்பர், மின்சிகரெட்டுகளையும் அது தொடர்பான பொருள்களையும் சிங்கப்பூருக்கு விநியோகிக்கும் வேலையை ஏற்பாடு செய்து கொடுத்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

ஒவ்வொரு டெலிவரிக்கும் 2 ரிங்கிட் (S$0.60) முதல் 10 ரிங்கிட் வரை தரப்படும் என்று ஆங்கிற்கு உறுதி அளிக்கப்பட்டது.

அதன்படி, அவர் விநியோகித்த செயலைக் கவனித்தபோது, நாள் ஒன்றுக்கு 100 ரிங்கிட் வரை சம்பாதித்திருக்கக்கூடும் என்றும் நீதிமன்றத்தில் கூறப்பட்டது.

செம்பவாங்கில் உள்ள ஒரு வீவக வீட்டிலிருந்து மாலை 5 மணி முதல் 6 மணிக்குள் பொட்டலங்களைச் சேகரிக்க வேண்டும் என ஆங்கிடம் தெரிவிக்கப்பட்டு, அவற்றை எங்கெங்கே விநியோகிக்க வேண்டும் என்ற இடங்களின் பட்டியலும் தரப்பட்டது.

சில இடங்களில் பொட்டலங்களைப் பெற்றுக்கொண்டு கொடுக்கப்படும் ரொக்கத்தை அவர் மலேசியா திரும்பியதும் ‘கென்னி’யிடம் தந்துவிட வேண்டும்.

அவர், ஆகஸ்ட் 28ஆம் தேதி வெலிங்டன் சர்க்கிள் பகுதியில் இரண்டு பைகளுடன் சென்றதை சுங்கத் துறை அதிகாரிகள் கண்டனர். பின்னர் பின்தொடர்ந்து சென்ற அதிகாரிகள் மாலை 5.45 மணியளவில் அங் மோ கியோ ஸ்திரீட் 65ல் அவரை நிறுத்தி விசாரித்தனர்.

அப்போது அவரிடம் 115 மின்சிகரெட்டுகளும் 258 மின்சிகரெட் சாதனங்களும் இருந்தன. அவற்றைச் சுகாதார அறிவியல் ஆணைய அதிகாரிகள் கைப்பற்றினர்.

குறிப்புச் சொற்கள்