உயர்நிலைப் பள்ளியின் முன்னாள் ஆசிரியர் ஒருவருக்கு 20 வாரங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
போலி அடையாளங்களுடன் இணையத்தில் செயல்பட்ட அவர், பலருக்குப் பாலியல்ரீதியான படங்களை அனுப்பினார்.
மற்றவர்கள் அவர்களின் பாலியல்ரீதியான அனுபவங்களைத் தம்முடன் பகிர்ந்துகொள்ளவேண்டும் என்பதற்காக, டே டொங் வெய், 36, இணையத்தில் பெண் வேடம் உள்ளிட்ட போலி அடையாளங்களைப் பயன்படுத்தினார்.
தனியார் துணைப்பாட ஆசிரியரான அவர் 2013ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு செப்டம்பர் வரை பள்ளி ஒன்றில் கற்பித்துக்கொண்டிருந்தார்.
அந்த நேரத்தில் 15க்கும் 20க்கும் இடைப்பட்ட வயதுடைய ஆண்களுக்கும் பெண்களுக்கும் அவர் பாலியல்ரீதியான காணொளிகளையும் படங்களையும் அனுப்பியதாகத் தெரிவிக்கப்பட்டது.
இணையம்வழி ஆபாசப் படங்களை அனுப்பியதற்கான ஆறு குற்றச்சாட்டுகளை அவர் கடந்த அக்டோபரில் ஒப்புக்கொண்டார்.