பிரேடலில் உள்ள தனியார் பேட்டை வீடு ஒன்றில் 67 வயது ஆடவர் ஒருவர் திங்கட்கிழமை பிற்பகல் மாண்டுகிடக்கக் காணப்பட்டார்.
பிரேடல் ஹில், புளோக் 10Rல் உள்ள வீடு ஒன்றில், இயற்கைக்கு மாறான மரணத்தின் தொடர்பில் திங்கட்கிழமை பிற்பகல் 4.10 மணிக்குத் தகவல் கிடைத்ததாகக் காவல்துறையினர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தனர்.
அந்த ஆடவர் மூச்சுபேச்சின்றி கிடந்ததாகவும் அவரது மரணம் சம்பவ இடத்திலேயே சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப்படையைச் சேர்ந்த மருத்துவ உதவியாளர்களால் உறுதிசெய்யப்பட்டதாகவும் அவர்கள் கூறினர்.
சம்பவம் நடந்த புளோக்கின்கீழே நான்கு காவல்துறை வாகனங்களையும் அவசர உதவி வாகனம் ஒன்றையும் மாலை 5 மணியளவில் காண முடிந்ததாக சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறினார்.
முதற்கட்ட விசாரணையின்படி, சந்தேகப்படும்படி எதுவும் நடந்ததாகத் தெரியவில்லை என்றும் விசாரணைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் காவல்துறையினர் கூறினர்.