சிராங்கூன் வட்டாரத்தில் 71 வயது முதியவர் தாக்கப்பட்டார்.
தாக்குதலில் காயமடைந்த முதியவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
இதுதொடர்பாக 31 வயது ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தாக்குதல் சம்பவம் சிராங்கூன் நார்த் அவென்யூ 2ல் உள்ள நடைபாதையில் நிகழ்ந்ததாகக் காவல்துறை தெரிவித்தது.
சந்தேக நபர் முதியவருக்கு அறிமுகமில்லாதவர் என்று ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாகக் காவல்துறை கூறியது.
தாக்குதலுக்கான நோக்கமும் இன்னும் தெரியவில்லை.
சம்பவ இடத்தில் நடத்தப்பட்ட விசாரணை, கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள் ஆகியவற்றின் மூலம் சந்தேக நபரை அங் மோ கியோ காவல்துறைப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் அடையாளம் கண்டனர்.
அந்த ஆடவர் நவம்பர் 20ஆம் தேதியன்று ஹவ்காங் ஸ்திரீட் 91ல் கைது செய்யப்பட்டார்.
தொடர்புடைய செய்திகள்
வேண்டுமென்றே படுகாயம் விளைவித்ததாக அவர் மீது நவம்பர் 21ஆம் தேதியன்று குற்றம் சாட்டப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்குப் பத்து ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையுடன் அபராதம் அல்லது பிரம்படி விதிக்கப்படலாம்.

