88 வயது ஆடவரை கத்தியால் தாக்கிய சந்தேகத்தில் 80 வயது ஆடவர் கைது

88 வயது ஆடவரை கத்தியால் தாக்கிய சந்தேகத்தில் 80 வயது ஆடவர் கைது

1 mins read
61528a30-2ec8-47ca-aac3-0a1640bfc930
படம்: SHIN MIN DAILY NEWS -

அங் மோ கியோவில் 80 வயது ஆடவர் ஒருவர் கத்தியால் 88 வயது ஆடவரைத் தாக்கியதாகச் சந்தேகிக்கப்படுகிறது.

இதனால் 88 வயது ஆடவருக்கு விரல்களிலும் முகத்திலும் காயங்கள் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

சந்தேக நபரான தியோ வூ செங்மீது ஆயுதம் கொண்டு தாக்குதல் நடத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

சம்பவம் அங் மோ கியோ அவென்யு 3, புளோக் 122வில் உள்ள செங் சியோங் வெளியே வெள்ளிக்கிழமை (மார்ச்17) மாலை நடந்தது.

தியோ, சாங்கி சிறையில் உள்ள மருத்துவ நிலையத்தில் தடுப்புக் காவலில் உள்ளார்.

அவர்மீது ஏப்ரல் 6ஆம் தேதி நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடத்தப்படவுள்ளது.