ஜூலை மாதத்தில் வானொலிப் படைப்பாளர் ஷேரல் மைல்ஸை அடித்ததாக முதலில் குற்றஞ்சாட்டப்பட்ட ஆடவர் ஒருவர், அதே மாதத்தில் மேலும் இரண்டு பெண்களைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
அந்த ஒன் ஃஎப்எம் 91.3 வானொலிப் படைப்பாளரை அடித்ததாகக் கூறப்பட்ட பிறகு 52 வயதான வில்லியம் அவ் சின் சாய்மீது முதலில் பொது இடத்தில் தொந்தரவு ஏற்படுத்தியதற்காக குற்றம் சுமத்தப்பட்டது. பின்னர் அப்படைப்பாளரைத் தாக்கியதற்கான குற்றச்சாட்டாக அது மாற்றப்பட்டது.
அவ், படைப்பாளரின் வலக்கையைத் தள்ளியதாக இப்போது கூறப்படுகிறது.
இதற்கிடையே, மேலும் இரு பெண்களைத் தாக்கியதாக செவ்வாய்க்கிழமை அவ்மீது இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
ஆர்ச்சர்ட் ரயில் நிலையத்தின் தளமேடையில் அவ் நின்றுகொண்டிருந்தபோது, மாது ஒருவரை வயிற்றில் உதைத்ததாகக் கூறப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து, மற்றொரு மாதைத் தலையில் தட்டியதாக அவர்மீது குற்றஞ்சாட்டப்பட்டது.
அவ்மீதான வழக்கு ஆகஸ்ட் 31ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.