பணிப்பெண்ணைத் துன்புறுத்தியதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட ஆடவர் அந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
துன்புறுத்தியதாகச் சந்தேகிக்கப்பட்ட பெண்ணிடம் ஆடவர் தனிப்பட்ட முறையில் இழப்பீடு கொடுத்திருக்கலாம் அல்லது மன்னிப்பு கேட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
வேண்டும் என்றே தாக்குவது, மானபங்கம் உள்ளிட்ட சில குற்றங்களுக்கு இரதரப்பும் உடன்பட்டு வழக்கைத் தொடர வேண்டாம் என்று முடிவு செய்தால் வழக்கிலிருந்து குற்றஞ்சாட்டப்பட்டவர் விடுவிக்கப்படுவார்.
அதன் அடிப்படையில் கடந்தவாரம் 48 வயது சோமாஸ்சன்மா வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார். அவர்மீது மீண்டும் இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்படாது.
கடந்த நவம்பர் மாதம் சோமாஸ்சன்மாமீது இரண்டு குற்றச்சாட்டுகள் பதிவுசெய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.