தாதிமை அறையில் பெண்ணை மானபங்கம் செய்த குற்றத்திலிருந்து ஆடவர் விடுவிப்பு

தாதிமை அறையில் பெண்ணை மானபங்கம் செய்த குற்றத்திலிருந்து ஆடவர் விடுவிப்பு

1 mins read
e4a393c4-c26c-4f5a-8b2b-7e8e1c58b53e
சிங்கப்பூர் உயர் நிதிமன்றம். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்ள
Google News Preferred Icon

பாலூட்டும் அறையில் பெண்ணை மானபங்கம் செய்த குற்றத்துக்காக சென்ற ஆண்டு நான்காண்டுகள் சிறைத்தண்டனையும் ஆறு பிரம்படிகளும் விதிக்கப்பட்ட ஆடவர் இப்போது அக்குற்றத்திலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

மேல்முறையீடு செய்ததைத் தொடர்ந்து அங்கித் சர்மா என்ற அந்த ஆடவர் திங்கட்கிழமை (மே 25) குற்றத்திலிருந்து விடுவிக்கப்பட்டார். அவருக்கு எதிராக சம்பந்தப்பட்ட மாது அளித்த வாக்குமூலத்தில் பல முரண்பட்ட அம்சங்கள் இருந்ததால் அவரைக் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்க முடியாது என்று உயர் நீதிமன்ற நீதிபதி கிறிஸ்டஃபர் டான் கூறினார்.

குறிப்பாக, அங்கித் சர்மா பாலியல்ரீதியாக வெளிப்படையாகக் கேள்விகள் கேட்டது தனக்கு மனவுளைச்சலை ஏற்படுத்தியதாக மாது கூறியிருந்தபோதும் அவருடனேயே தொடர்ந்து அவ்விடத்திலேயே இருந்தது நம்பகமான ஆதாரமாக இல்லை என்று அங்கித் சர்மாவைக் குற்றத்திலிருந்து விடுவித்த அந்த நீதிபதி சுட்டினார்.

சம்பந்தப்பட்ட மாதின் அடையாளத்தை வெளியிட அனுமதி கிடையாது.

கடந்த 2023ஆம் ஆண்டு மார்ச் ஒன்றாம் தேதி சாங்கி சிட்டி பாய்ன்ட்டில் மாதை மானபங்கம் செய்ததாக திரு சர்மா சந்தேகிக்கப்பட்டார். அதற்குப் பிறகு இருவருக்கும் இடையே பலமுறை பாலியல் ரீதியான சம்பவங்கள் நிகழ்ந்தன.

திரு சர்மாவும் கிட்டத்தட்ட அதே தகவல்களைத்தான் வெளியிட்டார். ஆனால், இருதரப்பின் சம்மதத்துடன்தான் சம்பவம் நிகழ்ந்ததாக அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்உயர் நீதிமன்றம்மானபங்கம்குற்றச்சாட்டுவிடுவிப்புசிறை