லஞ்சம் வாங்கி சிகரெட் கடத்தலுக்கு உதவி; குற்றத்தை ஒப்புக்கொண்ட ஆடவர்

லஞ்சம் வாங்கி சிகரெட் கடத்தலுக்கு உதவி; குற்றத்தை ஒப்புக்கொண்ட ஆடவர்

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

14 Apr 2026 - 9:59 pm

1 mins read

ஜூரோங் துறைமுகத்தில் செர்டிஸ் பாதுகாவல் அதிகாரியாகப் பணியாற்றியபோது லஞ்சம் வாங்கி சிகரெட் கடத்தலுக்கு உதவியுள்ளார் முகம்மது ஹாசிக் கருதீன்.

34 வயதான அவர் மூன்றரை மாதங்களில் மட்டும் 26 முறை சிகரெட் கடத்தலுக்கு உதவியுள்ளார். அதற்காக அவர் $1,572 வெள்ளி லஞ்சமாக வாங்கினார்.

பாதுகாவல் அதிகாரி பொறுப்பிலிருந்து நீக்கப்பட்ட ஹாசிக் தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார்.

ஜூரோங் துறைமுகத்தில் நடந்த சிகரெட் கடத்தல் தொடர்பில் விசாரிக்கப்படும் ஐந்தாவது நபர் ஹாசிக். அவருக்கு ஏப்ரல் 22ஆம் தேதி தண்டனை விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முகம்மது கைருள் அமீர், தனியா அப்துல் ரசாக், முகம்மது ஆசிபி சிலாமத் ஆகியவர்கள் மீது வழக்கு விசாரணை தொடர்கிறது.

முகம்மது சூகாய்மி கஸாலிக்கு நான்கு ஆண்டுகள் ஏழு மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் 5,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது.

கடத்தல் சம்பவம் 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்கும் நவம்பர் மாதத்திற்கும் இடையில் நடந்தது.

2024ஆம் ஆண்டு நடந்த ஒரு கடத்தல் முறியடிப்பு சம்பவத்தில் நடத்தப்பட்ட விசாரணையில் ஹாசிக் சிக்கினார். பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.

குறிப்புச் சொற்கள்