ரோலெக்ஸ் கைக்கடிகாரத்தைத் திருட திட்டமிட்டதை ஒப்புக்கொண்ட ஆடவர்

ரோலெக்ஸ் கைக்கடிகாரத்தைத் திருட திட்டமிட்டதை ஒப்புக்கொண்ட ஆடவர்

1 mins read
5cec1f84-8791-4161-9bdd-6be8d25c5001
28 வயது டோமினிக் சாவ் யீ, சொகுசுக் கைக்கடிகார விற்பனையாளர்களைத் தேடுவதற்காகத் தமது நண்பருக்கு ‘கேரோசெல்’ தளத்தில் உள்ள சட்டவிரோதக் கணக்குகளைப் பெற்றுத் தந்துள்ளார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

விலை உயர்ந்த ‘ரோலெக்ஸ் டேடோனா ஜான் மேயர்’ ரக கைக்கடிகாரத்தைத் திருட திட்டமிட்டதில் தமக்குப் பங்குண்டு என ஆடவர் ஒருவர் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார். சம்பந்தப்பட்ட கைக்கடிகாரத்தின் விலை $85,800.

28 வயது டோமினிக் சாவ் யீ, சொகுசுக் கைக்கடிகார விற்பனையாளர்களைத் தேடுவதற்காகத் தமது நண்பருக்கு ‘கேரோசெல்’ தளத்தில் உள்ள சட்டவிரோதக் கணக்குகளைப் பெற்றுத் தந்துள்ளார்.

அவரது நண்பரான 23 வயது டேரல் சென் யூ ஸி, 2025ஆம் ஆண்டு மே மாதத்தில் ரோலெக்ஸ் கைக்கடிகாரத்தை திருட 17 வயது சிறுவன் ஒருவனுக்கு ஏற்பாடு செய்திருந்தார்.

அந்தச் சிறுவன் துரத்திப் பிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அந்த விலை உயர்ந்த கைக்கடிகாரம் மீட்கப்பட்டது.

இந்தத் திருட்டுக் குற்றத்தில் சென் என்பவருக்கு உடந்தையாக இருந்ததை சாவ் திங்கட்கிழமையன்று (மார்ச் 30) ஒப்புக்கொண்டார். அவருக்கு மே மாதத்தில் தண்டனை விதிக்கப்படும்.

கணினியைச் சட்டவிரோத காரியங்களுக்குப் பயன்படுத்தியதாகவும் சென் மீது குற்றம் சுமத்தப்பட்டது. இக்குற்றத்தை அவர் ஒப்புக்கொண்டார்.

குறிப்புச் சொற்கள்