போலிக் கோரிக்கைகளுக்கு ஒப்புதல் வழங்கியதை ஒப்புக்கொண்ட ஆடவர்

போலிக் கோரிக்கைகளுக்கு ஒப்புதல் வழங்கியதை ஒப்புக்கொண்ட ஆடவர்

1 mins read
a21239a2-5bd0-409f-aa5e-a9a48b0b80ce
தம்மீது சுமத்தப்பட்ட ஆறு குற்றச்சாட்டுகளை டேவிட் சின், வியாழக்கிழமை (ஆகஸ்ட் 21) ஒப்புக்கொண்டார் - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

போலி கோரிக்கைகளுக்கு ஒப்புதல் வழங்கியதாக ஃபுல்லர்ட்டன் ஹெல்த்கேர் நிறுவனத்தை நிறுவிய மூவரில் ஒருவர் ஒப்புக்கொண்டார்.

$213,000 பெறுமானமுள்ள அந்தப் போலி கோரிக்கைகளுக்கு 2019ஆம் ஆண்டில் 46 வயது டேவிட் சின் கட்டங்கட்டமாக ஒப்புதல் வழங்கினார்.

அந்தக் கோரிக்கைகளை சக நிறுவனரான 51 வயது டேனியல் சான் பாய் ஷிங் சமர்ப்பித்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

ஃபுல்லர்ட்டன் ஹெல்த்கேர் நிறுவனத்தை ஏமாற்றும் நோக்குடன் சான் அவற்றைச் சமர்ப்பித்தார் என்று தெரிந்தும் சின் அவற்றுக்கு ஒப்பதல் வழங்கியதாக நீதிமன்ற ஆவணங்கள் தெரிவித்தன.

இருப்பினும், இச்செயலின் மூலம் சின்னுக்குப் பணம், தனிப்பட்ட அனுகூலங்கள் ஏதும் கிடைக்கவில்லை என்று அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.

தம்மீது சுமத்தப்பட்ட ஆறு குற்றச்சாட்டுகளை சின், வியாழக்கிழமை (ஆகஸ்ட் 21) ஒப்புக்கொண்டார்.

நிறுவனத்தின் இன்னொரு நிறுவனரான 51 வயது மைக்கல் டான் கிம் சோங்கிற்கும் இந்த விவகாரத்துக்கும் தொடர்பு இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.

நிறுவனர்கள் மூவரும் சிங்கப்பூரர்கள்.

குறிப்புச் சொற்கள்