தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

காவல்துறை அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வெளிநாட்டவர்

1 mins read
37260c1f-3389-4b68-a8f4-91f5988c1e1f
படம்: - தமிழ் முரசு

காவல்துறை அதிகாரி இருவருக்கு வெவ்வேறு சந்தர்ப்பங்களில் கையூட்டு கொடுக்க முயன்றதாகக் கூறி, சென் டொங்லியாங், 33, என்ற சீன நாட்டவர் புதன்கிழமை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

அந்த ஆடவர், காவல்துறை அதிகாரி ஒருவருக்கு 40 வெள்ளி கையூட்டு கொடுக்க முயன்றதாகவும் துணைக் காவல்துறை அதிகாரி ஒருவருக்கு 750 வெள்ளி கையூட்டு கொடுத்ததாகவும் கூறப்பட்டது.

அவர்மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின்கீழ் இரு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

2021 மே 26ஆம் தேதி சென் தன்மீது அமலாக்க நடவடிக்கை எடுப்பதைத் தவிர்ப்பதற்காக காவல் அதிகாரி ஒருவருக்கு $40 கையூட்டு கொடுக்க முயன்றதாகத் தெரிவிக்கப்பட்டது.

கையூட்டு கொடுப்பதற்குமுன் சென் என்ன குற்றம் இழைத்தார் என்பதைப் பற்றி நீதிமன்றம் எந்த ஆவணமும் வெளியிடவில்லை.

2022 ஜூலை மாதம், வேறொரு சந்தர்ப்பத்தில் செர்டிஸ் துணைக் காவல்துறை அதிகாரியாக இருந்த 30 வயது முருகன் சண்முகம் என்பவருக்கு சென் மொத்தமாக $750 கையூட்டு கொடுத்ததாக கூறப்படுகிறது.

சென் சட்டவிரோதமாக பாலியல் மருந்து விற்பனை செய்ததாகவும் தன்மீது அமலாக்க நடவடிக்கை எடுப்பதை தவிர்ப்பதற்காக முருகன் சண்முகத்திற்கு அவர் கையூட்டு கொடுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கு நவம்பர் 29ஆம் தேதி மீண்டும் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

ஊழல், நம்பிக்கை மோசடி உள்ளிட்ட குற்றங்களைப் புரிந்ததாக குற்றம் சாட்டப்பட்ட மூன்று முன்னாள் செர்டிஸ் அதிகாரிகளுடன் தொடர்புடைய வழக்கில் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட ஐந்தாவது நபர் சென் ஆவார்.

குறிப்புச் சொற்கள்