இணைய மோசடி: முகக்கவசங்களுக்காக $175,000 முன்பணம் பெற்று ஏமாற்றியதாக இளையர் கைது

ஒரு நிறுவனத்தின் ஊழியர்களுக்கு விநியோகிப்பதற்காக கேரொசெல் இணைய வர்த்தகப் பக்கம் வழியாக 500 பெட்டி முகக்கவசங்களை வாங்க முன்பணமாக $175,000 ஐ செலுத்தியவரை ஏமாற்றியதாக 28 வயது ஆடவரை போலிசார் கைது செய்துள்ளனர். 

முகக்கவசங்களுக்கான முன்பணம் பெற்றுக்கொண்ட பிறகு அந்த ஆடவரைத் தொடர்புகொள்ள இயலவில்லை, முகக்கவசங்களும் வந்து சேரவில்லை என்று போலிசில் புகார் அளிக்கப்பட்டதையடுத்து, அந்த ஆடவரை அங் மோ கியோ போலிஸ் பிரிவு அதிகாரிகள் நேற்று [பிப்ரவரி 14] கைது செய்தனர்.

அந்த ஆடவர் மீது இன்று நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும் என்று கூறப்பட்டது; குற்றம் நிரூபிக்கப்பட்டால் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, அபராதம் ஆகியன விதிக்கப்படலாம்.

#தமிழ்முரசு

Loading...
Load next