போதையில் காரோட்டி விபத்தை ஏற்படுத்திய ஆடவர் கைது

போதையில் காரோட்டி விபத்தை ஏற்படுத்திய ஆடவர் கைது

1 mins read
b0d21520-6712-48a6-b527-eab531c4c2ac
பக்கவாட்டில் கவிழ்ந்து கிடந்த கார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 2

போதையில் காரோட்டி விபத்தை ஏற்படுத்திய 29 வயது ஆடவர் கைதுசெய்யப்பட்டார்.

எட்ஜ்ஃபீல்டு பிளைன்ஸ் - பொங்கோல் டிரைவ் சந்திப்பில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 9) இரவு 8.15 மணியளவில் அவ்விபத்து நேர்ந்தது.

இரு கார்களுக்கு இடையிலான அவ்விபத்தை அடுத்து, அந்த கார்களின் ஓட்டுநர்களில் ஒருவர் கைதுசெய்யப்பட்டதாகக் காவல்துறை தெரிவித்தது.

விபத்தில் ஒருவர் லேசாகக் காயமுற்றதாகத் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது. ஆனாலும், அவர் மருத்துவமனைக்குச் செல்ல மறுத்துவிட்டார்.

அந்தச் சாலைச் சந்திப்பில் கருநிற கார் ஒன்று பக்கவாட்டில் கவிழ்ந்து கிடந்ததை இரவு 8.30 மணியளவில் கண்டதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி தெரிவித்தது. அவ்விடத்தில் அவசர மருத்துவ வாகனமும் தீயணைப்பு வாகனமும் இருந்ததாக அச்செய்தி கூறியது.

விபத்தால் சாலை பிரிப்பான் சேதமடைந்தது; போக்குவரத்து விளக்குக் கம்பம் ஒன்றும் தரையில் விழுந்து கிடந்தது.

கவிழ்ந்த காரின் சன்னல் கண்ணாடியை உடைக்க வழிப்போக்கர்கள் முயன்றதை ‘சிங்கப்பூர் ரோடு ஆக்சிடென்ட்’ ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்ட காணொளி காட்டியது.

விபத்து குறித்து காவல்துறை விசாரணை தொடர்கிறது.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்சாலை விபத்துமதுபோதை