தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மது அருந்திவிட்டு மற்றோர் ஓட்டுநருடன் கைகலப்பில் ஈடுபட்ட ஆடவர் கைது

1 mins read
387beadb-1bbc-4fb1-8130-0540835e4d24
ஸ்டாம்ப்’ வெளியிட்ட காணொளியில், மூன்றுவழிச் சாலையின் வலதுபுறப் பாதையில் இரு ஆடவர்கள் வசைபாடிக்கொள்வதைவும் பின்னர், கைகலப்பில் ஈடுபடுவதையும் காணமுடிந்தது. - படங்கள்: ஸ்டோம்ப்

மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்தியது மட்டுமன்றி மற்றொரு ஓட்டுநருடன் கைகலப்பில் ஈடுபட்ட 39 வயது ஆடவர் கைது செய்யப்பட்டார்.

ஜனவரி 31ஆம் தேதி நடந்த இச்சம்பவத்தில் தொடர்புடைய ஆடவர்,மற்றவருக்கு வேண்டுமென்றே காயம் விளைவித்ததற்கான விசாரணையிலும் உதவி வருவதாகக் காவல்துறை ஞாயிற்றுக்கிழமையன்று (பிப்ரவரி 2) கூறியது.

மெக்பர்சன் சாலை நோக்கி செல்லும் ஜாலான் தோ பாயோவில் விபத்து நடந்ததாக சீனப் புத்தாண்டின் மூன்றாவது நாளில் மாலை 4.45 மணியளவில் தங்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதாகக் காவல்துறை கூறியது.

‘ஸ்டோம்ப்’ வெளியிட்ட காணொளியில், மூன்றுவழிச் சாலையின் வலப்புறப் பாதையில் இரு ஆடவர்கள் வசைபாடிக்கொள்வதைக் காண முடிந்தது. பின்னர், அவர்கள் இருவரும் கைகலப்பில் ஈடுபடுவதையும் அவர்கள் ஓட்டிவந்த கார்கள் அவர்களுக்குப் பின்னால் நிற்பதையும் அந்தக் காணொளியில் பார்க்கலாம்.

கைகலப்பில் ஈடுபட்ட 48 வயதான மற்றோர் ஆடவருக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டன என்றும் மருத்துவமனைக்குச் செல்ல அவர் மறுத்துவிட்டார் என்றும் காவல்துறை தெரிவித்தது.

காவல்துறை விசாரணை தொடர்கிறது.

குறிப்புச் சொற்கள்