தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மதுபோதையில் கார் ஓட்டிய ஆடவர் கைது

1 mins read
50952b05-faa2-4ccd-af5f-54806ed6e7c0
பாதிக்கப்பட்ட 21 வயதுக்கும் 25 வயதுக்கும் இடைப்பட்ட மூன்று மோட்டார்சைக்கிளோட்டிகள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்போது சுயநினைவோடு இருந்ததாகக் காவல்துறை தெரிவித்தது. - படம்: எஸ்ஜி ரோடு விஜிலாண்டே

மது அருந்திவிட்டுப் போக்குவரத்துக்கு எதிராக கார் ஒட்டிய 38 வயது ஆடவர் கைது செய்யப்பட்டார்.

தீவி விரைவுச்சாலை நோக்கிச் செல்லும் தோ டக் அவென்யூக்கும் இணைப்புச் சாலைக்கும் இடையே இருக்கும் சந்திப்பில் இச்சம்பவம் நடந்ததாகக் காவல்துறையும் குடிமைத் தற்காப்புப் படையும் கூறின.

பாதிக்கப்பட்ட 21 வயதுக்கும் 25 வயதுக்கும் இடைப்பட்ட மூன்று மோட்டார்சைக்கிளோட்டிகள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது சுயநினைவோடு இருந்ததாகக் காவல்துறை தெரிவித்தது.

அக்டோபர் 13ஆம் தேதி இரவு 11.15 மணியளவில் நடந்த இச்சம்பவம் தொடர்பான காணொளியில், மோட்டார் சைக்கிளோட்டிகள் மூவர் போக்குவரத்து சந்திப்பு ஒன்றில் சாலையின் வலதுபுறத்தில் காத்திருப்பதையும் வெள்ளை நிற கார் ஒன்று எதிர்திசையில் வந்து அவர்களை நெருங்குவதையும் காண முடிந்தது.

மேலும், வாகனத்தைவிட்டு மோட்டார்சைக்கிளோட்டிகள் ஓடுவதையும் அவர்களில் ஒருவர் அவருக்கு அருகில் இருந்த புல்மீது விழுந்ததையும் அதில் பார்க்க முடிந்தது.

அந்த வெள்ளை நிற கார் மோட்டார்சைக்கிள்களுக்குப் பின்னால் நின்றிருந்த காரின்மீது மோதி நின்றதாகக் கூறப்பட்டது.

காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்