லிட்டில் இந்தியாவில், கத்தி, தக்கைத் திருகி (corkscrew), போதைப்பொருள் பயன்பாட்டுக்கென சந்தேகிக்கப்படும் கருவிகள் வைத்திருந்த 62 வயது ஆடவர் ஆகஸ்ட் 5ஆம் தேதி மாலை 4.15 மணிக்குக் கைதுசெய்யப்பட்டதாகக் காவல்துறை கூறியுள்ளது.
நோரிஸ் சாலைச் சந்திப்பில் நிகழ்ந்த சம்பவத்தை நேரில் கண்ட தமிழ் முரசிடம், ஆடவர் தடுத்து வைக்கப்பட்டிருந்ததைக் காவல்துறை உறுதிப்படுத்தியது.
ஆயுதங்கள் வைத்திருந்ததாலும் போதைப்பொருள் தொடர்பான குற்றம் புரிந்ததாகச் சந்தேகிக்கப்படுவதாலும் அவர் கைதுசெய்யப்பட்டார்.
காவல்துறையுடன் மத்தியப் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவும் விசாரணை நடத்திவருகிறது.

