சாலை விளக்குக் கம்பம், போக்குவரத்து விளக்கு மீது மோதிய கார் ஓட்டுநர் கைது

சாலை விளக்குக் கம்பம், போக்குவரத்து விளக்கு மீது மோதிய கார் ஓட்டுநர் கைது

28 May 2023 - 7:30 pm

1 mins read

செங்காங் வட்டாரத்தில் மதுபோதையில் வாகனமோட்டி சில விபத்துகளை ஏற்படுத்திய சந்தேகத்தின் பேரில் 46 வயது ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆடவர் சாலையில் இருந்த விளக்குக் கம்பம், இரண்டு கார்கள், போக்குவரத்து விளக்கு, சாலை அடையாள பலகை போன்றவற்றின் மீது மோதி சேதம் விளைவித்ததாகக் கூறப்படுகிறது.

விபத்தில் சிக்கிய இரண்டு கார்களில் ஒன்றில் 34 வயது பெண் பயணி ஒருவர் மாட்டிக்கொண்டார் அவரை மீட்புப்பணி கருவிகள் கொண்டு குடிமைத் தற்காப்புப் படை அதிகாரிகள் மீட்டனர்.

அந்தப் பெண் சுயநினைவுடன் இருந்ததாகவும் அவர் கூ டெக் புவாட் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

விபத்தில் சிக்கிய மற்றொரு நபருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டது, அவர் மருத்துவமனைக்கு செல்ல மறுத்தார்.

சம்பவம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2 மணிவாக்கில் ஃபெர்ன்வேல் ஸ்தீரிட், ஃபெர்ன்வேல் லின்க் சந்திப்பில் நடந்ததாகக் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்விபத்து