உட்லண்ட்ஸ் துணைச்சாலையில் இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாயின.
கார்களில் ஒன்று மோதிய வேகத்தில் தீப்பிடித்து எரிந்தது.
இந்தச் சம்பவம் வெள்ளிக்கிழமை காலை நடந்தது.
இந்த விபத்து, தீவு விரைவுச்சாலையை நோக்கிச் செல்லும் புக்கிட் தீமா விரைவுச்சாலையில் இருக்கும் உட்லண்ட்ஸ் துணைச்சாலையில் நடந்தது எனவும் விபத்து குறித்து வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்குத் தகவல் கிடைத்தது எனவும் காவல்துறை கூறியது.
இரு குழாய்களில் தண்ணீரைப் பீய்ச்சி அடித்து தீ அணைக்கப்பட்டது என்றும் இந்த விபத்தில் ஒருவருக்குச் சிறிய காயம் ஏற்பட்டது என்றும் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
மேலும், அவர் மருத்துவமனைக்கு வர மறுத்துவிட்டார் என்றும் அது குறிப்பிட்டது.
வெள்ளைநிற காரின் ஓட்டுநர் விசாரணைக்கு உதவி வருவதாகக் காவல்துறை தெரிவித்தது.
கறுப்பு நிற கார் ஒன்று விரைவுச்சாலையின் இடப்புறத்தில் தீப்பிடித்து எரிந்தது எனவும் அந்த காருக்கு எதிரே நின்றிருந்த சிவப்பு நிறக் காரின் அபாய விளக்குகள் எரிந்தவாறும் அதன் பின்பகுதி திறந்த நிலையிலும் இருந்தன எனவும் ஷின் மின் நாளிதழ் தெரிவித்தது.
தொடர்புடைய செய்திகள்
கடந்த இரண்டு நாள்களில், இதுபோல் சாலையில் கார் தீப்பற்றி எரிந்தது இது இரண்டாவது முறை எனக் கூறப்பட்டது.