மின்சிகரெட்டுடன் கார் ஓட்டியதாக நம்பப்படும் ஆடவரிடம் விசாரணை

1 mins read
1549a4c2-60c4-4a64-ba07-51118011c7e2
வெள்ளைக் காரை ஓட்டிய ஆடவர் போதையில் இருந்ததுடன் மின்சிகரெட் பிடித்ததாகக் கூறப்படுகிறது. - படம்: ‌ஷின் மின்

பொங்கோல் வேயில் நவம்பர் 5ஆம் தேதி தாறுமாறாகக் கார் ஓட்டிய ஆடவர் ஒருவர் கார் ஓட்டும்போதே மின்சிகரெட்டைப் பயன்படுத்திக்கொண்டிருந்ததாக நம்பப்படுகிறது.

வெள்ளைக் காரை ஓட்டிய ஆடவர், சமுத்ரா இலகு ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள பொங்கோல் வே சந்திப்பில் கார் நிறுத்தப்பட்டது.

மின்சிகரெட்டுடன் இருந்த ஓட்டுநரைக் காவல்துறை அதிகாரிகள் பிடித்து தம்மிடம் ஒப்படைத்த வழக்கு குறித்த விசாரணைகள் தொடர்வதாகச் சுகாதார அறிவியல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

பொங்கோல் வே அருகே மகனுடன் காரில் மற்றொருவரான 54 வயது திரு சு, காரை ஓட்டிய சந்தேக நபர் மிகவும் மெதுவாக அதை ஓட்டியதுடன் அடிக்கடி நிறுத்தி நிறுத்திச் சென்றதையும் குறிப்பிட்டார்.

ஓட்டுநருக்கு உடல்நலம் சரியில்லை என்று எண்ணிய திரு சு, அவரைச் சரிபார்க்க நினைத்தார். அப்போது ஆடவர் போதையேறிய நிலையில் இருந்ததையும் மின்சிகரெட்டுகளைப் பயன்படுத்தியிருந்ததையும் திரு சு கண்டதாகச் சொன்னார்.

அதிகாரிகளின் விசாரணை தொடர்கிறது.

குறிப்புச் சொற்கள்