ஜோகூர் கடற்பால ரயில்பாதை வழியாக சிங்கப்பூருக்குள் வர முயன்ற ஒருவர் சிக்கினார்.
குடிநுழைவு குற்றச்செயலில் ஈடுபட்டு இருக்கிறார் என்ற சந்தேகத்தின் பேரில் பங்ளாதேஷை சேர்ந்த ஒருவரைத் தாங்கள் மார்ச் 9ஆம் தேதி மடக்கியதாக குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணையம் ஃபேஸ்புக் பக்கத்தில் செவ்வாய்க்கிழமை (மார்ச் 14) தெரிவித்தது.
அவரிடம் அசல் ஆவணங்களோ பயண ஆவணங்களோ எதுவும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
சென்ற ஆண்டில் மொத்தம் 414 குடிநுழைவு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். இந்த எண்ணிக்கை 2021ஆம் ஆண்டில் 355 ஆக இருந்தது.

