ஜூரோங்கில் வீடுபுகுந்து திருடியதாக இளையர்மீது வழக்கு

ஜூரோங்கில் வீடுபுகுந்து திருடியதாக இளையர்மீது வழக்கு

1 mins read
ebbbf5c8-d1ff-4a63-8883-696ca1b41f46
$193 மதிப்புள்ள சமூக மன்ற பற்றுச்சீட்டுகள், 55 வெள்ளி ரொக்கம், 168 மலேசிய ரிங்கிட் ஆகியவற்றை இளையர் திருடியதாகக் காவல்துறை கூறியது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

https://www.straitstimes.com/singapore/courts-crime/man-charged-with-housebreaking-to-steal-cash-cdc-vouchers-convicted-of-similar-offence-in-2016

2016ஆம் ஆண்டு வீடுபுகுந்து திருடிய இளையர் தற்போது அதே தவற்றில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.

முகம்மது ஹிஸ்வான் ஹா‌ஷிம் என்னும் அந்த 27 வயது ஆடவர் திங்கட்கிழமை (ஜூன் 2) நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்தப்பட்டார்.

2016ஆம் ஆண்டு ஹா‌ஷிமுக்கு இளம் வயதாக இருந்ததால் அவர் செய்த குற்றத்திற்குக் கடுமையான சீர்திருத்தப் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது ஹா‌ஷிம் அதேபோன்ற குற்றச்சாட்டை எதிர்நோக்குகிறார்.

மே 31ஆம் தேதி, அதிகாலை 3.15 மணிவாக்கில் ஹா‌ஷிம், ஜூரோங் வெஸ்ட் ஸ்திரீட் 93ல் உள்ள 966 புளோக்கில் உள்ள வீடு ஒன்றின் பூட்டை உடைத்து திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படுகிறது.

$193 மதிப்புள்ள சமூக மன்ற பற்றுச்சீட்டுகள், 55 வெள்ளி ரொக்கம், 168 மலேசிய ரிங்கிட் ஆகியவற்றை அந்தச் சந்தேகப்பேர்வழி திருடியதாகக் காவல்துறை கூறியது.

அச்சம்பவம் குறித்து தங்களுக்கு அன்றைய தினம் காலை 8 மணியளவில் தகவல் தெரிவிக்கப்பட்டதாக ஜூன் 1ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காவல்துறை வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.

அதன்பின்னர் ஹா‌ஷிம் கைது செய்யப்பட்டார். பற்றுச்சீட்டுகளையும் ரொக்கத்தையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

ஹா‌ஷிம் மீதான வழக்கு விசாரணை ஜூன் 30ஆம் தேதி இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்