தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சமய உணர்வுகளைக் காயப்படுத்தும் கருத்துகள்; ஆடவர் மீது குற்றச்சாட்டு

1 mins read
3f466e99-d9cf-47c1-9db2-46acbbc50c0c
85 வயது கோ குவாங் போ, இஸ்லாத்தை இழிவுபடுத்தும் கருத்துகளை ஃபேஸ்புக்கில் பதிவிட்டதாகக் கூறப்படுகிறது. - படம்: இணையம்

முஸ்லிம்களின் சமய உணர்வைக் காயப்படுத்தும் நோக்குடன் ஆடவர் ஒருவர் வேண்டுமென்றே பதிவுகளை உருவாக்கி அவற்றை இணையத்தில் பதிவேற்றம் செய்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கோ குவாங் போ என்ற அந்த ஆட்வர், இஸ்லாத்தை இழிவுபடுத்தும் கருத்துகளை ஃபேஸ்புக்கில் பதிவிட்டதாகக் கூறப்படுகிறது.

அந்தக் கருத்துகளை அவர் 2021ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி பதிவேற்றம் செய்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து விசாரணை நடைபெற்றுக்கொண்டிருந்த நிலையில் 2022ஆம் ஆண்டில் கோ சிங்கப்பூரிலிருந்து புறப்பட்டு வெளிநாடு சென்றார்.

2024ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அவர் சிங்கப்பூர் திரும்பியதை அடுத்து, அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

சிங்கப்பூரரான 85 வயது கோ, நீதிமன்றத்தில் புதன்கிழமை (பிப்ரவரி 26) முன்னிலைப்படுத்தப்பட்டார்.

அவர் ஏப்ரல் 9ஆம் தேதி குற்றத்தை ஒப்புக்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இஸ்லாத்தை இழிவுபடுத்தி கோ முதன் முதலில் 2016ஆம் ஆண்டில் கருத்துகளைப் பதிவிட்டதாக நம்பப்படுகிறது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு மூன்றாண்டுகள் வரை சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.

குறிப்புச் சொற்கள்