தீயணைப்புப் பணியின்போது காவல்துறை அதிகாரிமீது உமிழ்ந்ததாக ஆடவர்மீது குற்றச்சாட்டு

தீயணைப்புப் பணியின்போது காவல்துறை அதிகாரிமீது உமிழ்ந்ததாக ஆடவர்மீது குற்றச்சாட்டு

1 mins read
53797dd3-4737-4fe0-aa41-855f6d9b803e
தன்னைக் கைது செய்ய முடியாது என்று கூச்சல் போட்டு கத்திய ஆடவரைக் காவல்துறையினர் கைது செய்தனர். - படம்: சிங்கப்பூர் இன்சிடென்ஸ் காணொளி/ ஃபேஸ்புக்

ஈசூனில் நடைபெற்ற தீயணைப்புப் பணியின்போது காவல்துறை அதிகாரி ஒருவர்மீது உமிழ்ந்ததாக 43 வயது முகமது யாசித் ஜுனைனே மீது திங்கட்கிழமை (ஜூலை 6) நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.

அவர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஏற்கெனவே கண்காணிப்பு உத்தரவில் வைக்கப்பட்டுள்ளார்.

அரசு ஊழியர்மீது குற்றவியல் பலத்தைப் பிரயோகித்ததாக யாசித்மீது குற்றம் சுமத்தப்பட்டது. அவரின் முந்தைய குற்றங்கள் குறித்த விவரங்கள் எதுவும் நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்படவில்லை. 2024 ஏப்ரலில் சிறையிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

2024 ஏப்ரல் 15 முதல் 2026 அக்டோபர் 12 வரை கண்காணிப்பு உத்தரவில் யாசித் வைக்கப்பட்டுள்ளார். இதன்படி, அவர் எந்தவொரு குற்றச்செயலிலும் ஈடுபடாமல் இருக்க வேண்டும்.

இருப்பினும், ஜூலை 3ஆம் தேதி இரவு 8 மணியளவில் ஈசூன் ரிங் ரோடு, புளோக் 381Cயில் நடைபெற்ற தீயணைப்புப் பணியின்போது, அங்கிருந்த காவல்துறை அதிகாரிமீது அவர் உமிழ்ந்ததாகக் கூறப்படுகிறது.

மருத்துவப் பரிசோதனைக்காக யாசித்தை மனநலக் கழகத்தில் தடுப்புக்காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கு ஜூலை 20ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது.

குறிப்புச் சொற்கள்