நான்கு நிறுவனங்களுக்கு இயக்குநராக இருந்த ஆடவர், 17 நபர்களையும் ஒரு நிறுவனத்தையும் மோசடி செய்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது.
நிறுவனத்திடம் இருந்து 682,300 வெள்ளியும் மற்ற நபர்களிடம் 3.9 மில்லியன் வெள்ளியும் ஆடவர் ஏமாற்றியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
ஓங் கை மின் என்ற அந்த ஆடவர் 2019ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை குற்றச் செயலில் ஈடுபட்டதாக நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.
மோசடி நடந்ததாகக் கூறப்படும் காலகட்டத்தில் எஸ்ஐடிஐ (SITI), புக் ஹீரோ, ஓகேஎம் (OKM), சி7 ஆகிய நிறுவனங்களில் ஓங் இயக்குநராக இருந்தார்.
சி7 நிறுவனம் வனுவாத்து நாட்டில் பதிவு செய்யப்பட்ட நிறுவனம்.
சிங்கப்பூரரான 42 வயது ஓங்மீது மோசடி, நீதிக்கு இடையூறு ஏற்படுத்தியது என 23 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
2019ஆம் ஆண்டு மே மாதத்திற்கும் 2021ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்கும் இடையில் முதலீட்டாளர்களிடம் பெறப்பட்ட பணத்தை சி7 நிறுவனத்திற்கு நேர்மையற்ற முறையில் ஓங் அனுப்பியுள்ளார்.
மேலும், ஓங் வர்த்தகம் தொடர்பாக நிதி வேண்டும் என்று ஆடவர் ஒருவரிடம் கிட்டத்தட்ட 20 முறை பணம் பெற்றுள்ளார். அவர் ஓங்கின் நிறுவனங்களுக்கு 600,000 வெள்ளிக்கு மேல் பணம் அனுப்பினார்.
தொடர்புடைய செய்திகள்
2019 ஆகஸ்ட் - 2020 ஜூன் மாதத்திற்கு இடைப்பட்ட காலகட்டத்தில் நடந்தது.
கைரோஸ் மேனெஜ்மன்ட் நிறுவனத்திடம் 500,000 வெள்ளிக்கும் அதிகமான தொகையை 2020 செப்டம்பர் - 2021 ஜனவரிக்கு இடையே வரை ஓங் பெற்றார்.
முதலீடுகளுக்குச் சரியான பதில் வராததால் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பின்னர் நடந்த விசாரணையில் சி7 நிறுவனம் மூடப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
ஓங் மீதான விசாரணை அடுத்த மாதம் 4ஆம் தேதி நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
ஒவ்வொரு மோசடி குற்றத்திற்கும் ஓங்கிற்கும் 10 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.

