டோசன் பகுதியில் புளோக்கின் அடியில் மாண்டு கிடந்த ஆடவர்

2 mins read
3f15341d-49cb-42c5-a32a-f7bfec968d04
டோசன் ரோட்டில் உள்ள புளோக் 88ன் அடியில் ஆடவர் ஒருவர் அசைவின்றி கிடந்தார். - படம்: ஸ்டோம்ப்

டோசன் ரோட்டில் உள்ள புளோக் 88க்குக் கீழே 50 வயது ஆடவர் செப்டம்பர் 7ஆம் தேதியன்று ஒருவர் இறந்து கிடக்க காணப்பட்டார்.

அன்று இரவு 7.25 மணிக்கு இச்சம்பவம் பற்றி தங்களுக்குத் தகவல் கிடைத்ததாகக் காவல்துறை தெரிவித்தது.

அங்கு ஒரு புளோக்குக் கீழே ஆடவர் ஒருவர் அசைவின்றி கிடந்தார். அவரைப் பரிசோதித்த சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் மருத்துவ அதிகாரிகள் ஆடவரின் மரணத்தை உறுதிப்படுத்தினர்.

ஆரம்ப கட்ட விசாரணையின்படி, அந்த மரணத்தில் சூது இருப்பதாகச் சந்தேகிக்கவில்லை என்று காவல்துறை தெரிவித்தது.

ஸ்டோம்ப் இணையத்தள வாசகர் மாட்டின், “உயரத்தில் இருந்து அவர் விழுந்திருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது. சம்பவ இடத்தில் ஓர் ஆம்புலன்சும் பல காவல்துறை வாகனங்களும் இருந்தன. உடலை மறைக்க ஒரு நீல நிறக் கூடாரம் வைக்கப்பட்டிருந்தது,” என்றார்.

“காவல்துறையினர் அங்கு வந்து சேர்வதற்கு முன், ஒரு பெண் உடலருகே அழுது கொண்டிருந்தார்,” என்றும் திரு மார்ட்டின் சொன்னார்.

காறல்துறையின் விசாரணை தொடர்கிறது.

இது டோசன் பேட்டையில் நிகழ்ந்துள்ள மூன்றாவது மரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

பிப்ரவரி 3ஆம் தேதி, டோசன் சாலையின் 86வது புளோக்கில் 20 வயது இளைஞர் ஒருவர் இறந்து கிடந்தார். அவர் உயரத்திலிருந்து விழுந்ததாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.

டிசம்பர் 26, 2024 அன்று, டாசன் சாலையின் 88வது புளோக்கில் 19 வயது இளைஞர் ஒருவர் இறந்து கிடந்தார். இதை காவல்துறையினர் இயற்கைக்கு மாறான மரணம் என வகைப்படுத்தினர்.

குறிப்புச் சொற்கள்