கிளமெண்டி வணிக வளாகத்தில் பள்ளிச் சீருடையில் இருந்த 14 வயது சிறுமியை மானபங்கப்படுத்திய குற்றத்திற்காக 53 வயது ஆடவருக்கு ஒரு மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
அப்துல் கரீம் சையத் முஸ்கூத் என்ற அந்த ஆடவர், 2020 செப்டம்பரில் இந்தக் குற்றத்தைப் புரிந்ததாக கூறப்படுகிறது.
அந்த வணிக வளாகத்தில் தன் மனைவியுடன் அப்துல் மளிகைப் பொருள்களை வாங்கிக் கொண்டிருந்தபோது, தன் அருகே பள்ளிச் சீருடையில் நடந்து சென்ற சிறுமியின் பின்புறத்தைக் கையால் தொட்டதாக கூறப்படுகிறது.
இது குறித்து அச்சிறுமி காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தார்.
காவல்துறை விரைந்துவந்து அவரைக் கைது செய்தது.