11 வயது சிறுமியை மானபங்கம் செய்ததாக ஆடவர்மீது குற்றச்சாட்டு

11 வயது சிறுமியை மானபங்கம் செய்ததாக ஆடவர்மீது குற்றச்சாட்டு

1 mins read
ae6bc473-a6fb-4de5-9267-f7feb01d211f
வழக்கு விசாரணை ஏப்ரல் 9ஆம் தேதி நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

உட்லண்ட்ஸ் வட்டாரத்தில் 11 வயதுச் சிறுமியை மானபங்கம் செய்ததாக ஆடவர்மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. சம்பவம் மார்ச் 17ஆம் தேதி காலை 8 மணிவாக்கில் உட்லண்ட்ஸ் ஸ்திரீட் 81ல் நடந்ததாக நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.   ‌ஷேக் ரஸி முகம்மது ரிசா என்னும் 29 வயது ஆடவர்மீது வியாழக்கிழமை (மார்ச் 19) குற்றஞ்சாட்டப்பட்டது.  ஆடவர் சிறுமியிடம் அத்துமீறி நடந்துகொண்டதாக மார்ச் 17ஆம் தேதி பிற்பகல் 3.30 மணிவாக்கில் காவல்துறையிடம் புகாரளிக்கப்பட்டது. வேகமாகச் செயல்பட்ட அதிகாரிகள் ரிசாவை மறுநாள் கைது செய்தனர். ரிசா சாங்கிச் சிறை வளாகத்தில் உள்ள மருத்துவ நிலையத்தில் மருத்துவப் பரிசோதனைக்காகத் தடுத்து வைக்கப்பட்டார். வழக்கு விசாரணை ஏப்ரல் 9ஆம் தேதி நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. சிங்கப்பூரில் 2024ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2025ஆம் ஆண்டு மானபங்கம் தொடர்பான குற்றங்கள் சற்று அதிகரித்துள்ளன. 2024ஆம் ஆண்டு 1,427 மானபங்க வழக்குகள் பதிவாகின. 2025ஆம் ஆண்டு அந்த எண்ணிக்கை 1,531ஆகக் கூடியது. அதாவது சிங்கப்பூரில் நாள் ஒன்றுக்கு நான்கு மானபங்க வழக்குகள் பதிவு செய்யப்படுவதாகத் தரவுகள் கூறுகின்றன.  14 வயதுக்குக் கீழ் உள்ள சிறுவர் சிறுமிகளை மானபங்கம் செய்வோருக்கு ஐந்து ஆண்டுகள் வரையிலான சிறை, அபராதம், பிரம்படி ஆகிய தண்டனைகள் விதிக்கப்படலாம். 

குறிப்புச் சொற்கள்