ஒரு வாகனத்தைத் திருடிய குற்றம் 59 வயது ஆடவர் ஒருவர்மீது சனிக்கிழமை (ஆகஸ்ட் 22) சுமத்தப்படவுள்ளது.
ஜாலான் புக்கிட் மேரா ரோட்டில் வியாழக்கிழமை இரவு 7.15 மணியளவில் சம்பவம் குறித்துத் தகவல் கிடைத்ததாகக் காவல்துறை தெரிவித்தது.
ஆரம்பக்கட்ட விசாரணையில் லாரி ஓட்டுநர் அங்கு பொருள்களை சக ஊழியருடன் இறக்கிவைத்துக்கொண்டிருந்தார் எனவும் அப்போது அந்த ஆடவர் அவர்களை நெருங்கி லாரி அவரை வழிமறித்ததாகக் குறைகூறியதாகவும் தெரியவந்தது.
பிறகு அறிவிப்பின்றி அந்த ஆடவர் லாரியில் ஏறி அதனை ஓட்டிச் சென்றார். அந்த லாரியின் ஊழியர் ஒருவர் தடுக்க முயன்றும் அவரை ஆடவர் தரையில் தள்ளிவிட்டுச் சென்றுள்ளார்.
புகார் கிடைத்து ஆறு மணிநேரத்தில் காவல்துறையினர் ஆடவரைக் கண்டுபிடித்து கைது செய்தனர். லாரியும் மீட்டு எடுக்கப்பட்டது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஆடவருக்கு ஏழு ஆண்டுகள் சிறையும் அபராதமும் விதிக்கப்படலாம்.


