இன்னோர் ஆடவரிடமிருந்து ஆடவர் ஒருவர் கேலாங் வட்டாரத்தில் பாலியல் சேவை பெற்றுக்கொண்டார்.
அதையடுத்து, பாலியல் சேவை வழங்கிய ஆடவரிமிருந்து பணம் திருடியதுடன் அவரை அந்த நபர் தாக்கினார்.
பாதிக்கப்பட்ட 44 வயது ஆடவரின் மண்டை ஓடு முறிந்தது. அத்துடன், முகத்தில் உள்ள எலும்புகளும் முறிந்தன.
அந்த ஆடவரிடமிருந்து பணம் திருடியபோது அவருக்குக் கடுமையான காயங்கள் விளைவித்ததை 23 வயது ரிச்சர்ட் எம். அஸார் திங்கட்கிழமையன்று (செப்டம்பர் 29) ஒப்புக்கொண்டார்.
அஸாருக்கு நான்கரை ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 12 பிரம்படிகளும் விதிக்கப்பட்டன.
அதே ஆடவரிடமிருந்து பாலியல் சேவை பெற்றுக்கொண்டு அவரைத் தாக்கியதாகக் கூறப்படும் ஷாக்குர் ஹான் ஷாயிட் தொடர்பான வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது.

