பூன்லே அருகே பாரந்தூக்கியில் வேலை செய்துகொண்டிருந்த ஆடவர் அதைக் கவிழ்த்தியுள்ளார்.
சம்பவம் நேற்று (மார்ச் 13) நடந்தது. அதில் ஆடவருக்கு காயம் ஏற்பட்டது.
35 ஷிப்யார்ட் ரோட்டில் உள்ள வேலையிடத்தில் பாரந்தூக்கியில் வேலை செய்துகொண்டிருந்த போது சம்பவம் நடந்ததாகவும், அதில் வேலை செய்த ஆடவருக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டதாகவும் எக்சான்மொபில் (ExxonMobil) நிறுவனத்தின் பேச்சாளர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸிடம் தெரிவித்தார்.
காயமடைந்த நபர் ஒப்பந்த முறையில் வேலை செய்யும் ஹூவாடியாங் ஹோல்டிங்ஸின் ஊழியர் என்று பேச்சாளர் குறிப்பிட்டார்.
ஆடவருக்கு உடனடி மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டதாகவவும் அவர் மீண்டும் வேலைக்கு செல்ல உடல்தகுதி இருப்பதை மருத்துவர் உறுதி செய்துள்ளதாகவும் பேச்சாளர் தெரிவித்தார்.
சம்பவ இடத்தில் வேறு யாருக்கும் காயம் ஏற்படவில்லை. பாரந்தூக்கி கவிழ்ந்த பிறகு அந்த இடத்தில் வேலை நிறுத்தப்பட்டது.

