சுங்கச் சாவடியில் வாகனத்தால் அதிகாரியைக் காயப்படுத்திய ஆடவர்

சுங்கச் சாவடியில் வாகனத்தால் அதிகாரியைக் காயப்படுத்திய ஆடவர்

1 mins read
2740bb39-654c-44e5-8f31-55d08f4aab96
ஸ்டீவ் லிங் வெய் லியாங், 40. - ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரிலிருந்து மலேசியாவுக்குச் செல்லவிருந்த வாகனத்தைச் சோதனை செய்துகொண்டிருந்த அதிகாரியைப் பொருட்படுத்தாமல், அவ்வாகனத்தை முன் ஓட்டி அவரைக் காயப்படுத்திய கார் ஓட்டுநருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

சம்பவம் கடந்த 2023ஆம் ஆண்டு டிசம்பர் 12ஆம் தேதி பிற்பகல் மூன்று மணியளவில் உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடியில் நடந்துள்ளது.

மலேசியாவுக்குள் நுழையுமுன் எரிவாயு குறைந்தபட்ச அளவு உள்ளதா என்பதை அந்த அதிகாரி சோதித்துக் கொண்டிருந்தார் என்று நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருந்தது.

சட்டத்துக்குப் புறம்பாக வாகனத்தில் எரிவாயு அளவு குறைவாக உள்ளது என்பதை அவர் கண்டறிந்துவிட்டார் என்பதை உணர்ந்து அந்த ஓட்டுநர் வாகனத்தை முன்புறமாக ஓட்டினார். அப்போது அதிகாரியின் ஒரு கைப்பாகம் வாகனத்துக்குள் உள்ள ஓட்டுநர் சக்கரத்தின்மீது இருந்தது. அதனால் வாகனத்தின் வேகத்தால் அவர் இழுத்துச் செல்லப்பட்டு முழங்கால் உட்பட அதிகாரிக்கு காயங்கள் ஏற்பட்டன.

கவனக்குறைவாகச் செயல்பட்டதாக ஸ்டீவ் லிங் வெய் லியாங் என்ற அந்த 40 வயது ஆடவர்மீது குற்றம் சுமத்தப்பட்டது.

வழக்கு விசாரணைக்குப் பிறகு ஆடவருக்கு எட்டு மாதம் மூன்று வாரங்கள் சிறைத் தண்டனை புதன்கிழமை (மார்ச் 25) விதிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்