வியட்னாமைச் சேர்ந்த நோயன் நட் அன் என்னும் 20 வயது ஆடவர், 350,000 வெள்ளி திருட்டில் இரண்டு நபர்களுக்கு உதவியவர்.
அவர் திருட்டு சம்பவம் தொடர்பாக கைது செய்யப்படுவதற்கு முன்னர், போதைப்பொருள் குற்றங்களுக்காக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார். அப்போது அதிகாரிகள் அவரிடம் மருத்துவப் பரிசோதனை செய்தனர்.
மருத்துவப் பரிசோதனையில் ஆடவரின் சிறுநீரில் போதைப்பொருள் உட்கொண்டதற்கான சான்றுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அதன் பின்னர் அவர் பிணையில் வெளிவந்தார். பிணையில் இருந்த நேரத்தில் அவர் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டார்.
இந்நிலையில், போதைப்பொருள் குற்றத்திற்காக நோயன் குறைந்தது ஓராண்டாவது சீர்திருத்தப் பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என்று வெள்ளிக்கிழமை (டிசம்பர் 27) உத்தரவிடப்பட்டுள்ளது.
பொதுவாக இளம் குற்றவாளிகள் சீர்திருத்தப் பயிற்சி நிலையங்களுக்கு அனுப்பப்படுவார்கள். அங்கு அவர்களுக்கு கடுமையான ஒழுக்கமும், விழிப்புணர்வு பயிற்சிகளும் வழங்கப்படும்.
நோயன் தமது தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு செய்யவுள்ளார்.
திருட்டுச் சம்பவம்
திருட்டுச் சம்பவம் 2023ஆம் ஆண்டு செப்டம்பர் 29ஆம் தேதி நடந்தது. அப்போது நோயனுக்கு 18 வயது. நோயன் இரு சிங்கப்பூரர்களுடன் இணைந்து திருட்டில் ஈடுபட்டார்.
தொடர்புடைய செய்திகள்
நியூயென், கடந்த ஆகஸ்ட் மாதம் போதைப்பொருள் உட்கொண்டதையும் பணத்தை திருட உதவியதையும் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.
திருட்டில் ஈடுபட்ட 24 வயது டேரன் லிம், 25 வயது டோபியஸ் டான் இருவருக்கும் இவ்வாண்டு தொடக்கத்தில் தண்டனை விதிக்கப்பட்டது.

