ஸ்டேடியம் ‘எம்ஆர்டி’யில் அமளியில் ஈடுபட்ட ஆடவர் கைது

1 mins read
9a3db750-5e47-4efd-84e8-5e0107439132
பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் அமளியில் ஈடுபட்டதாக முகம்மது ஹபீஸ் அயூப் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் அமளியில் ஈடுபட்டதாக 30 வயதான முகம்மது ஹபீஸ் அயூப் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அவர் ஆகஸ்ட் 2ஆம் தேதி இரவு 9.30 மணிக்கு ஸ்டேடியம் பெருவிரைவு ரயில் நிலையத்தில் (எம் ஆர்டி) அமளியில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

சத்தமாகக் கத்திக்கொண்டு ஸ்டேடியம் எம்ஆர்டியில் இருந்த பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக ஆக்ரோஷமாக நடந்து சென்றார் என ஹபீஸ் மீது குற்றம் சாட்டப்பட்டது.

கடந்த திங்கட்கிழமை, சிங்கப்பூர் தேசிய விளையாட்டு அரங்கத்தில் நடந்த காற்பந்து நட்பு ஆட்டத்தில் ஜெர்மன் அணியான பயர்ன் முனிச்சிடம் இங்கிலாந்து அணி தோல்வியடைந்தது. அதனைத் தொடர்ந்து ‘லிவர்பூல்’ என எழுதப்பட்டிருந்த சட்டையை அணிந்திருந்த ஆடவர் அமளியில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

இது குறித்துக் காவல்துறைக்குப் புகார் அளிக்கப்பட்டது.

“விரிவான விசாரணை மேற்கொண்டும் கண்காணிப்புப் புகைப்படக் கருவி உதவியுடனும் பிடோக் காவல்நிலையத்தைச் சேர்ந்த அதிகாரிகள் அந்த ஆடவரை அடையாளம் கண்டு ஆகஸ்ட் 4ஆம் தேதி கைது செய்தனர்,” எனக் காவல்துறை தனது அறிக்கையில் தெரிவித்தது

ஹபீசின் வழக்கு ஆகஸ்ட் 28ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு $2000 வரை அபராதம் விதிக்கப்படலாம்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்